Skip to main content

‘ஃபெஞ்சல் புயல் தீவிரமான இயற்கை பேரிடர்’ - தமிழக அரசு அறிவிப்பு

Published on 04/01/2025 | Edited on 04/01/2025
Tamil Nadu government announced Fengal storm severe natural calamity

கடந்தாண்டு நவம்பர் மாதம் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து ஃபெஞ்சல் புயலின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ள  மக்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் அரசிதழல், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், பேரிடர் நிதி மட்டுமின்றி பிற நிதிகளையும் சீரமைப்புப் பணிகளுக்காக பயன்படுத்த முடியும். ஏற்கெனவே, ஃபெஞ்சல் புயல் காரணமாக சீரமைப்பு பணிகளுக்காக மத்திய அரசிடம் தமிழக அரசு ரூ.6,000 கோடி கேட்டிருந்த நிலையில், ஃபெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்