பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வாழ்த்து பெற்றார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியின் பிறந்த நாள் ஜனவரி 6ம் தேதி என்பதால் ஒவ்வொரு வருடமும் தொகுதி மக்கள் மட்டுமல்ல திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் இருக்கும் கட்சி பொறுப்பாளர்களும், தொண்டர்களும் அமைச்சர் பெரியசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம், மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் உள்பட மக்களுக்கு தங்களால் முடிந்த அளவு உதவிகளை செய்து வருவது வழக்கம்.
அதுபோல் அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்தித்து வாழ்த்து பெறுவார்கள். அதுபோல் இந்த வருடமும் கட்சிப் பொறுப்பாளர்களும் பிறந்த நாளை கொண்டாடினார்கள். ஆனால் இந்த முறை சட்டமன்ற கூட்டத் தொடர் இருப்பதால் அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று சென்னை சென்று விட்டார். அதைத்தொடர்ந்து இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதுபோல் தமிழக முதல்வரும் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு பட்டு வேஷ்டி அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் மற்றும் அமைச்சரின் உதவியாளரான ரெக்ஸ், வேலு ஆகியோரும் உடன் இருந்தனர். அதுபோல்; துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அமைச்சர்களும் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் சென்னையில் உள்ள கிரீன்வே சாலையில் இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமியை உணவு மற்றம் உணவுப்பொருள் துறை அமைச்சர் சக்கரபாணி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் ஆகியோர் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
அதுபோல் அமைச்சரும், நேர்முக உதவியாளரான ராஜா மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அதிகாரியும், அமைச்சரின் நேர்முக உதவியாளருமான வடமலையான் மற்றும் திண்டுக்கல் மாநகர மேயர் இளமதிஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர்களான நாகராஜன், பிலால், திண்டுக்கல் மாநகர கிழக்குப் பகுதி செயலாளர் ராஜேந்திரக் குமார், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர்களான நெடுஞ்செழியன், வெள்ளிமலை, ஆத்தூர் ஒன்றிய செயலாளர் முருகேசன், அகரம் பேரூராட்சி தலைவர் நந்தகோபால், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அக்பர், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம், மாவட்ட விவசாயி அணி அமைப்பாளர் இல.கண்ணன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்தித்து வாழ்த்து பெற்று மாலை, சால்வை அணிவித்ததுடன் மட்டுமல்லாமல் வெள்ளிவாள் கொடுத்து ஏலக்காய் மாலையும் அணிவித்தனர். இப்படி அமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு சென்னைக்கு படை எடுத்த கட்சிப் பொறுப்பாளர்களுக்கு சைவம் மற்றும் அசைவ விருந்து வழங்கப்பட்டது.