Skip to main content

அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்

Published on 06/01/2025 | Edited on 06/01/2025
ajith good bad ugly release update

அஜித்குமார் தற்போது விடாமுயற்சி மற்றும் குட்-பேட்-அக்லி என இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி வரும் நிலையில் லைகா தயாரிக்க த்ரிஷா, அர்ஜூன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து பொங்கலுக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென பின்வாங்கிவிட்டது. பிப்ரவரியில் வெளியாகலாம் என திரை வட்டாரங்கள் சொல்கின்றனர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தப் படத்திற்கு அடுத்த படமாக உருவாகி வரும் குட்-பேட்-அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித்துடைய காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டது. இப்படத்தில் பிரசன்னா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் அஜித் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதில் அஜித் மாறுபட்ட தோற்றத்தில் இளமை தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். இப்படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு பின்பு பின்வாங்கியது. ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் குட்-பேட்-அக்லி படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே தகவல் வெளியானது போல ஏப்ரல் 10ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. பொங்கலுக்கு விடாமுயற்சி வராமல் இருந்ததால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.  இதே ஏப்ரல் 10ஆம் தேதி தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

சார்ந்த செய்திகள்