நடிகர் எஸ்.வி. சேகர் மீதான வழக்கில் காவல்துறையின் விசாரணை சரியாக இருப்பது போல தெரியவில்லை என்று உயர் நீதிமன்றம் அதிப்தி தெரிவித்துள்ளது.
பெண் பத்திரிக்கையானர்கள் குறித்து அவதுரான கருத்து தெரிவித்த எஸ்.வி. சேகரின் முன் ஜாமீன் மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
எஸ்.வி. சேகர் இரண்டு வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளமான பேஸ்புக்கில் பெண் பத்திரிக்கையாளரை அவதூறான கருத்துகளை வெளியிட்டார். அது குறித்த புகாரை மத்திய குற்றப்பிரிவில் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் எஸ்.வி.சேகர் தனக்கு முன் ஜாமீன் அளிக்கக் கோரி மனு அளித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்துக்கு வந்தது. இந்த நிலையில் எஸ்.வி. சேகருக்கு முன் ஜாமீன் அளிக்ககூடாது என்று 10க்கும் மேற்ப்பட்ட இடை மனுதாரர்கள் முறையிட்டனர். எஸ்.வி. சேகரின் குற்றம் என்பது மிக சாதரண குற்றம் அல்ல. பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை முழுமையாக தடுக்க வேண்டும். அவரது நடவடிக்கை என்பது பெண் சமுதாயத்திற்கு எதிரான நடவடிக்கையாக பார்க்க வேண்டும் எனவே அவருக்கு எந்த வகையிலும் முன் ஜாமீன் வழங்கக்கூடாது என இடைமனுதாரர்கள் கூறினார்கள்.
எஸ்.வி. சேகர் மீதான வழக்கில் காவல்துறையின் விசாரணை சரியாக இருப்பது போல தெரியவில்லை. எனவே காவல்துறை உரிய முறையில் பரிசீலிக்க வேண்டும் நீதிபதி தெரிவித்தார். மேலும் தேதி குறிப்பிடமால் தீர்ப்பை தள்ளி வைத்தனர்.