உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது நீட் தேர்வு முடிவுகளை அவசர அவசரமாக வெளியிட காரணம் என்ன என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
நீட் தேர்வினால் ஏற்பட்ட மன அழுத்ததில் விழுப்புரம் செஞ்சியை சேர்ந்த பிரதிபா , டெல்லி மாணவன் பர்ணா ஆகியோர் தற்கொலை செய்துள்ளனர். 61, 350 மருத்துவ பணியிடங்களுக்கு, 13 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். இதில் ஏழே கால் லட்சம் பேர் தேர்வு பெற்று , ஒரு மருத்துவ பணியிடத்திற்கு 12 பேர் போட்டியிடும் நிலை. நீட் தேர்வை CBSE பாடத்திட்டத்தில் இருந்து நீக்கி அந்தந்த மாநில கல்வி திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது நீட் தேர்வு முடிவுகளை அவசர அவசரமாக வெளியிட காரணம் என்ன. இதற்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பு ஏற்க வேண்டும். பிரதிபா போல் அதே மாவட்டத்தை சேர்ந்த கீர்த்தனா தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் பிற மாநிலங்களில் தற்கொலை தொடர்கிறது . இதனால் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
தூத்துக்குடியில் நடந்தது திட்டமிட்ட வன்முறை வெறியாட்டம். மத்திய, மாநில அரசுகள் ,ஆலை நிர்வாகம் திட்டமிட்டு ஒடுக்குமுறையை ஏவி உள்ளது. மக்கள் பேரணியாக செல்லும் போது மாவட்ட ஆட்சியர் அலுவலக குடியிருப்புகளில் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தற்கு காவல்துறையே பொறுப்பு.
சுப்பிரமணிய சுவாமி பொதுவாக தமிழர் நலனையோ. போராட்டங்களையோ ஆதரிப்பது கிடையாது , கொச்சைபடுத்தி பேசுவது தான் வாடிக்கை. தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக ஒரு நபர் ஆணையம் அருணா ஜெகதீசன் விசாரணை வேண்டாம் என்கிறோம், மேலும் இதற்கு முன் நடைபெற்ற விசாரணையில் அவர் ஆளும் கட்சிக்கு சாதமாகவே இருந்துள்ளார். ஆகவே பணியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணை ஆணையம் அமைக்கவும். அதில் புலானாய்வு துறையை கொண்டு சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என திருமாவளவன் கூறினார்.