


அருவிகளின் நகரமான குற்றாலத்தில் வழக்கமாக ஜூன் மாதமே தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக சீசன் துவங்கும். அதன் விளைவாக கோடையிலும் குற்றால நகரில் குளிர் சீசன் தொடங்க, தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும். சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலையடிக்கும்.
தற்போது சீசனுக்கான சூழல்கள் தென்பட்டாலும் தூறல்கள் இல்லாத நேரத்தில் நேற்றைய தினம் 27 ஆண்டுகளுக்கு பின்பு வரலாறு காணாத அளவில் சென்னையில் திடீரென கனமழை பெய்ததின் காரணமாக வெப்பம் தணிந்தோடு சாலைகளில் மழைநீர் ஓடத்தொடங்கியது. அதேபோன்று நேற்று மாலை குற்றால மழையின் நீர்பிடிப்பு பகுதியில் அரை மணி நேரம் மின்னல் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சிறிது நேரத்திற்குள் மெயினருவி உள்ளிட்ட அருவிகளிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் காலையில் அருவிகளில் தண்ணீர் குறைந்து விட்டது. இது குற்றால சீசனுடன் இணைந்த மழையா அல்லது வானிலை மையம் அறிவித்தபடி தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையுடன் சேர்ந்ததா என்ற சந்தேகம் நீடிக்கிறது.