Skip to main content

கபடி விளையாடிய மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

student who played kabaddi fainted and passed away shortly after

 

கபடி விளையாடச் சென்ற மாணவன் மயக்கம் வருவதாக சொன்ன சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் அமரசிம்மேந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குமார். இவரது மகன் விஜயராஜ் (வயது 17). அருகில் தஞ்சாவூர் மாவட்டம் மணக்காடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்தார். நேற்று சனிக்கிழமை பள்ளிக்கு சென்று மதியம் வீடு திரும்பியவர் மாலை சக நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள விளையாட்டுத் திடலில் கபடி விளையாடியுள்ளார். 

 

விளையாடிக் கொண்டிருந்தபோது விஜயராஜ்க்கு மயக்கம் வருவதாக சொன்னதால் வெளியில் அமர வைத்துள்ளனர். சிறிது நேரத்தில் மயக்கமடைந்து கீழே சாய்ந்ததைப் பார்த்து சக நண்பர்கள் உடனே பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் விஜயராஜ் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். நன்றாக விளையாடச் சென்ற மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

 

இதே போல கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதே அறந்தாங்கி வட்டம் பெருங்காடு அரசுப் பள்ளியில் மாணவன் மாரிமுத்து பள்ளி வராண்டாவிலேயே மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

 

 

 

சார்ந்த செய்திகள்