கரூரில் உள்ள திருவள்ளுவர் மைதானத்தில் ரோட் டிராக் கிளப் கரூர் மற்றும் கரூர் வாலிபால் சங்கம் சார்பில் ஆண்களுக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டி கடந்த 15ஆம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்தப் போட்டி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இதில் சென்னை லயோலா கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, பொள்ளாச்சி எஸ்.டி.சி, திருச்சி சென் ஜோசப், சென்னை சென் ஜோசப், பெருந்துறை கலை அறிவியல் கல்லூரி, கரூர் குமாரசாமி இன்ஜினியரிங் கல்லூரி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த எட்டு அணிகள் கலந்து கொண்டன. இந்த போட்டி லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெற்றது.
இதன் இறுதி போட்டி, கரூரில் இன்று நடைபெற்றது. இந்த இறுதி ஆட்டத்தில் பொள்ளாச்சி எஸ்.டி.சி அணியும், கரூர் குமாரசாமி கல்லூரி அணியும் மோதியது. இதில் 25-18, 25-18, 25-22 புள்ளி கணக்கில் பொள்ளாச்சி எஸ்.டி.சி அணி வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இரண்டாம் இடத்தை கரூ குமாரசாமி கல்லூரியும், மூன்றாவது இடத்தை சென்னை செயிண்ட் ஜோசப் கல்லூரியும் பிடித்தன. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் பரிசு தொகையும் சுழற் கோப்பையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.