Published on 09/04/2021 | Edited on 09/04/2021
![ரகத](http://image.nakkheeran.in/cdn/farfuture/831MNGcheh1yEfH9kr3Irxa9NK0CfrHq0l86HVE80bE/1617975924/sites/default/files/inline-images/uyiy_29.jpg)
தமிழகத்தில் கடந்த 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் 73 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை நடத்தினார். தேர்தலில் வெற்றிவாய்ப்பு குறித்தும், கூட்டணிக் கட்சியினர் ஒத்துழைப்பு குறித்தும் வேட்பாளர்களிடம் ஸ்டாலின் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.