Published on 08/02/2019 | Edited on 08/02/2019

இன்று பேரவையில் துணைமுதல்வர் ஓபிஎஸ் பட்ஜெட் தாக்கல் செய்ததை அடுத்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது,
இது ஏழை எளிய மக்களுக்கான பட்ஜெட் அல்ல, சங்கீத வித்வான் போல் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார் ஓபிஎஸ். வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான எந்த அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
வளர்ச்சிக்கு செலவு செய்யவேண்டிய அரசு வாங்கிய கடனுக்கு வட்டியை செலுத்துவத்தைதான் இந்த உதவாக்கரை பட்ஜெட் காட்டுகிறது. சுமார் நான்கு லட்சம் கோடி கடன் ஆனால் வருவாயை பெருக்க எந்த திட்டமும் இல்லை.
கடந்த காலத்தில் 110 விதியை பயன்படுத்தி வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டிருந்தார்களோ அதேபோல்தான் ஏட்டு சுரைக்காயாக இந்த பட்ஜெட் உள்ளது எனக்கூறினார்.