Skip to main content

போலிஸ் ஸ்டேஷன் முத்த புகழ் எஸ்.எஸ்.ஐ. இன்னோரு காதலியுடன் தலைமறைவு !

Published on 22/12/2018 | Edited on 22/12/2018

சோம்பரசம் பேட்டை காவல் நிலையத்தில் பெண் போலீசுக்கு முத்தமிட்ட காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அது வாட்ஸ்அப் மற்றும் வலைதளங்களில் வைரலாக பரவியது. இது சம்மந்தமாக ஜீயபுரம் டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் நடத்திய அதிரடி விசாரணையில், சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் மற்றும் எஸ்.எஸ்.ஐ பாலசுப்பிரமணியனிடம் விசாரித்த விவரம் ஆகியவற்றை அறிக்கையாக மாவட்ட எஸ்.பி. ஜியாவுல் ஹக்கிடம் கொடுத்தார்.

 

policeman

 

இதற்கிடையே பெண் போலீசை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் 3 பிரிவுகளின் கீழ் எஸ்.எஸ்.ஐ. பாலசுப்பிரமணியன் மீது சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட பெண் போலிஸ் சசிகலாவிடம் அன்றைய தினம் நடந்தது என்ன? என்று பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 இன்ஸ்பெக்டர்கள் விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்துள்ளனர். இந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடுவதை அறிந்த பாலசுப்பிரமணியன் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு தலைமறைவான சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனுக்கு சொந்த ஊர் திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட உய்யகொண்டான் திருமலை அருகே உள்ள கொடாப்பு ஆகும். அவருக்கு மனைவி, மகள், மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அதே  ஊரைச்சேர்ந்த திருமணம் ஆன இன்னோரு பெண்ணுடன் தொடர்பு இருந்திருக்கிறது. 

 

policeman

 

கடந்த 3 நாட்களாக அந்த பெண்ணையும் காணவில்லையாம். உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே பாலசுப்பிரமணியன் தனது தோழியையும் தன்னுடன் அழைத்து சென்று தலைமறைமானதாக ஏரியாக்காரர்கள் சொல்கிறார்கள்.. அதை உறுதி செய்யும் வகையில் போலீசார் விசாரித்துள்ளனர். தற்போது பாலசுப்பிரமணியன் அந்த பெண்ணுடன் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, சோமரசம்பேட்டை போலீசார் ராஜபாளையம் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

 

 

policeman

 

இதற்கிடையில் முத்த வீடியோ யார் வெளியிட்டது என்கிற பிரச்சனையில் அந்த ஸ்டேஷனில் ஏற்கனவே இருந்த இன்ஸ்பெக்டருக்கு வேண்டப்பட்ட ஏட்டு ஒருவர் இந்த வீடியோவை வெளியிட்டார்கள் என்பதும். தற்போது ஏற்கனவே இருந்த இன்ஸ், அவருடைய வேண்டப்பட்ட ஏட்டு என ஆகியோர் மீது விசாரணை திரும்பி உள்ளது. ஒரு முத்தகாட்சி வெளியாகி இதை யார் வெளியிட்டது என்கிற விசாரணை பல்வேறு திருப்பங்களுக்கு இடையே சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய ஆசாமி; காப்பு போட்ட காவல்துறை

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Police action on Worker who threatened women by making obscene videos

அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா (42). இவர் அங்குள்ள பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். பாரதிராஜாவுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், இவர் பல பெண்களுடன் பழகி வந்துள்ளதாகவும், அவர்களுடன் தனியே இருக்கும் போது, புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து அந்த பெண்களை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில், பாதிக்கப்பட்ட சில பெண்கள், பாரதிராஜாவுடன் இது தொடர்பாக வாக்குவாதம் செய்து வந்துள்ளனர். 

அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாற, இந்த சம்பவம் குறித்து பாரதிராஜா மீது அந்த பெண்கள், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில், பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையின் அடிப்படையில், பாரதிராஜாவின் செல்போனை வாங்கி பரிசோதனை செய்தனர். அப்போது, அதில் ஏராளமான பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, பாரதிராஜாவை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.