Skip to main content

7 ஆண்டுகளுக்கு பிறகு இருவழி சாலையாகியது அண்ணா சாலை!

Published on 11/09/2019 | Edited on 11/09/2019

மெட்ரோ ரயில் சுரங்க பணிகளுக்காக சென்னை அண்ணா சாலை கடந்த 2012 ஆம் ஆண்டு ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டது. இந்நிலையில் மெட்ரோ பணிகள் முடிவுற்றதால் 7 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா சாலை மீண்டும் இருவழி சாலையாக மாற்ற சென்னை மாநகர காவல்துறை முடிவெடுத்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் இன்றும் நாளையும் நடக்கவிருக்கிறது.


 

 Anna Road is a two-way road after 7 years

 

அண்ணா சாலையிலிருந்து அண்ணா சிலையை நோக்கி செல்வதில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் அண்ணா சிலையிலிருந்து தேனாம்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் எல்.ஐ.சி, டிவிஎஸ் வழியாக அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்