இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தஞ்சையில் ஒரு இஸ்லாமிய இளைஞரை ரகசியமாக சந்தித்து பேசிய இலங்கை தமிழரை பிடித்து கியூ பிரிவு போலிசார் விசாரனை செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை மேரிஸ் கார்னர் பகுதில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த பாரூக் என்பவரை இலங்கையிலிருந்து கள்ளத்தனமாக வந்துள்ள ரஞ்சித் என்பவர் சந்தித்து பேசியுள்ளார் என்ற தகவல் அறிந்து கியூ பிரிவு போலிசார் ரஞ்சித்தையும் பாரூக்கையும் பிடித்து தனித்தனியாக வைத்து விசாரனை செய்து வருகின்றனர்.
ரஞ்சித்திடம் பட்டுக்கோட்டையில் வைத்து விசாரனை நடக்கிறது. முதல்கட்ட விசாரனையில் 19 ந் தேதிவாக்கில் தஞ்சை வந்துள்ளதும் அவரிடம் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களும் இல்லை என்பதும் தஞ்சை பாரூக்கை சந்தித்து பேசியுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. மேலும் எதற்காக கள்ளத்தனமாக இலங்கையிலிருந்து வந்தார் என்றும் அவருடன் வேறு யாரும் வந்துள்ளனரா? எந்த வழியாக வந்தார்கள் அவர்களின் நோக்கம் என்ன என்பது பற்றி விசாரனை நடக்கிறது.
அதே போல பாரூக்கிடம் தஞ்சையில் கியூ பிரிவு போலிசார் விசாரனை செய்கிறார்கள். எதற்காக ரஞ்சித் இந்தியா வந்து பாரூக்கை சந்தித்து பேசினார் என்றும் விசாரனை தொடர்கிறது. ஏதேனும் கடத்தல் சம்பவங்கள் இருக்கலாமோ என்றும் போலிசார் சந்தேகித்துள்ளனர்.