Published on 19/05/2023 | Edited on 19/05/2023
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஊராம்பட்டி கிராமத்தில் கடற்கரை என்பவர் இளவரசி ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அங்கு 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அங்கு திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த வெடிவிபத்தில் 2 அறைகள் தரைமட்டமாயின. குமரேசன், சுந்தர்ராஜ், அய்யம்மாள் ஆகிய மூவர் உயிரிழந்தனர். படுகாயமுற்ற இருளாயி என்பவருக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக மாரனேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளர் கடற்கரை மற்றும் போர்மென் காளியப்பன் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.