Published on 10/02/2019 | Edited on 10/02/2019

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேர் படகுடன் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 7ம் தேதி பைபர் படகுகளில் நாகையில் இருந்து புறப்பட்ட மீனவர்கள் கோடியக்கரை கடற்கரையிலிருந்து 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்களை சிறை பிடித்தனர். திருகோணமலைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட 7 பேரும் இன்று நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.