Skip to main content

விவசாயிகளை காப்பாற்ற முடியவில்லை என்றால் நஷ்டஈடாவது கொடுங்க.. அய்யாக்கண்ணு

Published on 06/09/2018 | Edited on 07/09/2018
ay

 

திருச்சி முக்கொம்புவில் உடைந்த அணையை சீரமைக்கும் பணி நடைபெறவதை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு நேரில் சென்று பார்த்து, பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடம் பணியின் துரித தன்மையை கேட்டறிந்தார்.

 

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசும் போது.. 

’’மத்தவுங்களுக்கு வெள்ளம் வந்தாலும் பிரச்சனை இல்ல… மாவட்ட ஆட்சித்தலைவர் நாளைக்கு தண்ணீ தருவேன்னு சொன்னாங்க, இதுவரைக்கும் விடவில்லை. எங்களை காப்பாற்ற முடியவில்லை என்றால் நஷ்டஈடாவது ஏக்கருக்கு 30,000 கொடுக்க வேண்டும். இப்ப வரைக்கும் தண்ணீரை அடைக்க முடியாமல் தண்ணீர் தற்போது வரை விரையமாகி கொண்டே இருக்கிறது. இன்னும் கடைமடைகளுக்கு தண்ணீர் வரவில்லை. இன்னைக்கு அடைத்து விடுவோம் என்கிறார்கள் எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. 

 

ஆனால் அதிகாரிகள் இன்று அடைத்து விடுவோம் என்கிறார்கள். நாளைக்கு மதியம் கடைமடைகளுக்கு தண்ணீர் விடுவோம் என்று சொல்றாங்க, அன்னைக்கு கூட முதல்அமைச்சர் நாலு நாளில் வேலை முடிந்துவிடும் சொன்னாங்க, ஆனா இப்ப வரைக்கும் முடியல இது முடியவில்லை என்றால் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். 


இப்போ போட்டுக்கொண்டிருக்கிற அடைப்பு தற்காலிகமானது. தான் 3 மாதத்திற்குள் நிரந்தர பாலம் அமைத்து விட வேண்டும். அதுவும் வடகிழக்கு பருவமழை பெய்ய ஆரம்பிப்பதற்குள் கட்டி முடித்து விட வேண்டும் . செய்வார்கள் என்று நம்புவோம் என்றார். 


 

 

சார்ந்த செய்திகள்