கல்வித் துறையில் அதிநவீன புரட்சிகள் செய்து வருகிறோம் என மேடை தோறும் பேசுகிறார் கல்வி அமைச்சரான செங்கோட்டையன் ஆனால் அவரது சொந்த ஊர் அருகே இருக்கும் ஒரு கிராம பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களே இல்லை. ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் எப்படி கல்வி கற்பார்கள்? இப்படி கேட்பது அக்கிராம பள்ளியில் படிக்கும் மாணவ குழந்தைகள் தான்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து விட்டு பள்ளி சீருடைடையுடன் தங்களது பெற்றோருடன் வந்து கலெக்டர் கதிரவனை சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியதாவது, "நாங்கள் சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வருகிறோம். இங்கு 1 -ம் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரை 160 மாணவ மாணவிகள் படித்து வருகிறோம். எங்களுக்கு ஒரு தலைமை ஆசிரியரும் ஒரு இடைநிலை ஆசிரியர் மட்டுமே உள்ளார்கள்.போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட வே இல்லை. எங்களுக்கு குறைந்த பட்சம் ஐந்து ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தலைமையாசிரியர் உட்பட 2 ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.
இதனால் எங்களது கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது நாங்களும் வருடக்கணக்காக ஆசியர் வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டு விட்டோம் இனியாவது எங்கள் பள்ளியில் தேவையான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.