சர்வதேச மகளிர் தினமான இன்று உழைக்கும் பெண்கள் அமைப்பு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கமான ஏஐடியுசி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு அச்சங்கத்தின் மாநில செயலாளர் சின்னச்சாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் மத்திய, மாநில அரசுகளே, பெண்கள் மீதான பாலியல் உள்ளிட்ட வன்கொடுமைகளை தடுத்து நிறுத்து பணியிடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் ரூ.18,000/-க்கு குறையாத மாதச் சம்பளம் வழங்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி, சமவேலைக்கு சமஊதியம் கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பணிநியமனம் என்ற கொத்தடிமைச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். பெருமுதலாளிகளுக்கும், பன்னாட்டு கம்பெனிகளுக்கும் ஆதரவாக தொழிலாளர் சட்டங்களை சிதைக்க கூடாது.
மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ள, 18வயது முதல் 40வயது வரையிலான அமைப்புச் சாராத் தொழிலாளர்கள் மாதந்தோறும் ரூ.55/- முதல் ரூ200/-வரை குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 42 ஆண்டுகள் வரை தவறாமல் பங்குத் தொகை செலுத்தினால் அவர்களுக்கு 60 வயதுக்குப் பின்னர் மாதம் ரூ3000/- ஓய்வூதியம் என்ற ஏமாற்றுத் திட்டத்தை கைவிட்டு விட்டு, 60 வயதான எல்லாருக்கும் உடனடியாக ஓய்வூதியம் கொடுக்க வேண்டும்.
தமிழக அரசு, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அறிவித்து விட்டு, அதற்கான தொகையை கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய நிதியில் இருந்து வசூலிக்க உத்தரவிட்டுள்ளதை ரத்து செய்திட வேண்டும். என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்த ஆட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாசலம் மற்றும் ஏஐடியுசி உழைக்கும் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த ராஜம்மாள்.மெகரூன், மேலும் பலர் கலந்து கொன்டனர். மகளிர் தினத்தில் வெறுமனமே கொன்டாட்டம் இல்லாமல் கோரிக்கைகளை வைத்து போராட வைத்திருக்கிறது மத்திய, மாநில அரசுகள்.