Skip to main content

ஜாபர்கான் பேட்டை ஜவகர்லால் நேரு சாலையில் உள்ள காசி திரையரங்கு முன் சர்கார் பட போஸ்டர்கள் கிழிப்பு (படங்கள்)

Published on 08/11/2018 | Edited on 08/11/2018

சார்ந்த செய்திகள்

Next Story

இயக்குனர் முருகதாஸ் மீது மூன்று வழக்கு!!

Published on 10/12/2018 | Edited on 10/12/2018

 

Three cases against Murugadoss have provoked public against the government

 

திரைப்பட இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மீது சென்னையில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

அரசு திட்டங்களை விமர்சித்ததாக சமூக ஆர்வலர் தேவராஜ் என்பவர் புகார் அளித்ததின் பேரில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். சமீபத்தில் வெளியான சர்கார் படத்தில் இலவசத் திட்டங்கள் குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். 

 

பின்னர் அந்த காட்சிகள் நீக்கப்பட்டது. ஆனால் இலவச திட்டங்களை விமர்சித்து பொதுமக்களை தூண்டுவதாக இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் தேவராஜ் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் தற்போது புகார் அளித்தார். அதனடிப்படையில் 153 ,153ஏ  505 ஏ பி சி ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் முருகதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யதுள்ளது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ். ஏற்கனவே இதே விவகார வழக்கில் ஏ ஆர் முருகதாஸை கைது செய்ய தடை விதித்திருந்தது நீதிமன்றம் என்பது குறிப்பட்டத்தக்கது. 

 

 

 

Next Story

சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம்?? ஆட்சியர் அறிக்கை சமர்ப்பிக்க கோரி நீதிமன்றம் உத்தரவு!!

Published on 26/11/2018 | Edited on 26/11/2018

 

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் வெளியான சர்கார் படத்தின் டிக்கெட்களை அதிக விலைக்கு விற்றதுதொடர்பான வழக்கில் தியேட்டர்கள் கட்டணம் வசூல் பற்றிய அறிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

highcourt

 

சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாற்று எழுந்து மகேந்திர பாண்டி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கில் தமிழக அரசு நிர்ணயித்துள்ள கட்டணம்தான் திரையரங்குகளில் வசூலிக்கப்பட்ட வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம் இதுதொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் இரண்டு சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்த நிலையில், அதுபோன்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை எனக்கூறி மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. 

 

இன்று விசாரணைக்கு வந்த  இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சர்கார் திரைப்படம் வெளியான நவ 6 முதல் 16ஆம் தேதி வரை திரையரங்குகளில் எவ்வளவு கட்டணம் வசூலாகியுள்ளது என்பது தொடர்பான அறிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 6-ஆம் தேதி ஒத்திவைத்தது நீதிமன்றம்.