தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. ஆனால் எந்த ஊரிலும் ஆளும் கட்சி தவிர மாற்றுக் கட்சியினர் வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் வாங்கவில்லை. ஒரு சில இடங்களில் வாங்கினாலும் பரிசீலனையில் தள்ளுபடி செய்தனர்.
ஆளும் கட்சியினர் கொடுக்கும் பட்டியலை மட்டும் வேட்பாளர்களாக அறிவித்து போட்டி இன்றி தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதை செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கூட்டுறவு சங்கங்களிலும் இதே நிலை நீடித்து வருகிறது. இதனால் மறியல் முற்றுகை போராட்டங்கள் நடந்து வருகிறது.
இன்று புதுக்கோட்டை அர்பன் வங்கி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கிய போது அ.தி.மு.க எடப்பாடி அணி ந.செ பாஸ்கர் டீம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து அதிமுக ஒ.பி.எஸ் அணி வேட்பாளர்கள் மாஜி கார்த்திக் தொண்டைமான், ராஜசேகர் குழுவினர் வேட்பு மனு தாக்கல் செய்ய திரண்ட போது தடுக்கப்பட்டனர்.
அதே போல தி.முக, அ.ம.மு .க வினரும் தடுக்கப்பட்ட நிலையில் மோதல் உருவானது. அ.தி.மு.க வினர் கல்வீசி தாக்கியதில் திமுக மாஜி எம்.எல்.ஏ இலக்கிய அணி கவிதைப் பித்தனுக்கு நெஞ்சில் செங்கல் அடிபட்டு காயமடைந்தார். அதே போல ராசேந்திரன், சப் இன்ஸ் பெக்டர் யோகரெத்தினம், இன்ஸ் ஒருவர் என பலருக்கும் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு எஸ்பி செல்வராஜ் தலைமையில் போலிசார் குவிக்கப்பட்டு செங்கல்வக்கு காவல் இருந்தனர்.
தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற போது அங்கு தேர்தல் அதிகாரி தப்பி ஒடிவிட்டார். அதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தேர்தல் நிறுத்தப்பட்டதாக தி.மு.க உள்ளிட்டவர்கள் சொல்லி சென்ற நிலையில் அ.தி.மு.க வினர் வெற்றி பெற்றதாக பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
தேர்தலே நடக்காமல் வெற்றி. அது தான் அதி.முக என்றனர் ர.ரக்கள்.