விஜய் மக்கள் இயக்கம் வரும் 28-ம் தேதி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்பது தொடர்பாக பல்வேறு பேச்சுகள் இருந்து வரும் நிலையில் அவ்வப்போது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை நடிகர் விஜய் சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இலவச மதிய உணவு வழங்க விஜய் மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 'தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்' என்ற திட்டம் மூலம் உலக பட்டினி தினமான மே 28ஆம் தேதி காலை 11 மணியிலிருந்து இலவச மதிய உணவு வழங்கப்பட இருக்கிறது.
தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தைத் திறந்து வைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.