தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26/11/2021) சென்னையில் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையும், தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனமும், இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து 'கனெக்ட்' மாநாட்டில், தமிழ்நாடு தரவு மையக் கொள்கை கையேட்டினை வெளியிட, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பெற்றுக் கொண்டார். மேலும், தொழில்நுட்ப திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுத் தொகைக்கான காசோலையை வழங்கினார். மாநாட்டில் கண்காட்சி அரங்குகளைத் திறந்துவைத்த முதலமைச்சர், நேரில் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் நீரஜ் மித்தல் இ.ஆ.ப., இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவின் இயக்குநர் டாக்டர் சஞ்சய் தியாகி, 'சைனட்' துணைத் தலைவர் பி.வி.ஆர்.ரெட்டி, கனெக்ட் தலைவர் ஜோஷ் ஃபோல்கர், இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழக தலைவர் டாக்டர் எஸ்.சந்திரகுமார், எல்காட் மேலாண்மை இயக்குநர் அஜய் யாதவ் இ.ஆ.ப., அரசு உயரதிகாரிகள் மற்றும் தொலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.