![salem incident... Relatives struggle](http://image.nakkheeran.in/cdn/farfuture/Fj1YiACd0A5SednSZNzTofnXhTsca_GEqEX9jdt-KTE/1654343480/sites/default/files/inline-images/zzz_6.jpg)
ஹோட்டலில் வேலை செய்துவந்த ஊழியர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் புதூர் கல்லாங்குத்து பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் சேலம் அரியானூர் அருகே உள்ள 7 ஸ்டார் தாபா என்ற ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். நீண்ட வருடமாக அந்த ஹேட்டலில் வேலை செய்து வந்த மணிகண்டன் ஆயிரம், ஐநூறு என அவ்வப்போது ஹோட்டலில் தனது தேவைக்காக பணம் எடுத்து வந்துள்ளார். ஹேட்டலின் உரிமையாளர்கள் பாலாஜி, அசோக்,சுரேஷ் ஆகியோர் 5 லட்சம் ரூபாயை மணிகண்டன் திருடியதாக மிரட்டி துன்புறுத்தி கையெழுத்து பெற்றதாகவும் அதனால் தான் மன உளைச்சல் அடைந்துள்ளதாகவும் வீடியோ வெளியிட்ட மணிகண்டன் தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் மணிகண்டனின் உறவினர்கள் தாபா ஹோட்டல் உரிமையாளர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.