Skip to main content

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,665 கன அடியாக குறைந்தது!

Published on 27/08/2020 | Edited on 27/08/2020

 

salem district mettur dam water level

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.

 

இன்று (27/08/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,204 கன அடியில் இருந்து 4,665 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94.92 அடியாகவும், நீர் இருப்பு 58.45 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. டெல்டா பாசன தேவைக்காக காவிரியில் நீர் திறப்பு 18,000 கன அடியாகவும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்க்கு 600 கன அடியாகவும் உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்