Published on 31/05/2020 | Edited on 01/06/2020
![Rs. 12,500 for each family - Resolution at DMK Advisory Meeting](http://image.nakkheeran.in/cdn/farfuture/_WlXT6gc7VOwvUHMLFSFNIwJMtwmC4qoluk53IJs2Vg/1590934444/sites/default/files/inline-images/adadadadadadaadad_3.jpg)
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்றது. காணொலி மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீட் ஒதுக்கீடு, கரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க., வி.சி.க., கொ.ம.தே.க. ஆகிய தி.மு.க.வின் தோழமை கட்சிகள் பங்கு பெற்ற நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு சார்பில் 7,500 ரூபாயும், மாநில அரசு சார்பில் 5,000 ரூபாய் என ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12,500 ரூபாய் வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.