Skip to main content

சிறையில் வைத்து கைது; போலீசாரிடம் ரவுடி நாகேந்திரன் வாக்குவாதம்

Published on 09/08/2024 | Edited on 09/08/2024
Rowdy Nagendran arrested in jail

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமனின் தந்தையான ரவுடி நாகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இடையே ஏற்கனவே இருந்த மோதலில், அஸ்வத்தாமனின் தந்தை ரவுடி நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங்கை சில ஆண்டுகளுக்கு முன்பு நேரில் அழைத்துப் பேசியதாகவும், ஆனால் அப்போது ஆம்ஸ்ட்ராங் எதற்கும் பிடி கொடுக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பின்பு நாகேந்திரன் கொலை வழக்கு ஒன்றில் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்ய சிறையிலேயே திட்டமிட்டாரா? என்ற சந்தேகம் போலீசிறையில் வைத்து கைது; போலீசாரிடம் ரவுடி நாகேந்திரன் வாக்குவாதம்ருக்கு எழுந்தது.

இந்நிலையில், தனிப்படை போலீசார் கடந்த ஒரு வருடங்களாக நாகேந்திரனை சிறையில் வந்து சந்தித்தவர்கள் யார் யார் என்ற விவரங்களை சேகரித்து, அதனடிப்படையில் நாகேந்திரன் தொடர்பான ஆடியோக்கள் மற்றும் வீடியோக்களையும் சேகரித்து விசாரணை நடத்தினர்.

 

Rowdy Nagendran arrested in jail

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாகேந்திரன் பெயரும் குற்றத்தில் 24 வது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் உள்ள நாகேந்திரனை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்வதற்கான கைது ஆணையை சிறை நிர்வாகத்திடம் செம்பியம் போலீசார் வழங்கினர்.

கைது ஆணையை நாகேந்திரனிடம் கொடுத்தபோது, நாகேந்திரன் ரகளை செய்து வாக்குவாத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது கொலைக்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது. என்னை எதற்காக வழக்கில் சேர்த்து இருக்கிறீர்கள். என் மகனை எதற்காக கைது செய்து இருக்கிறீர்கள் என்று நாகேந்திரன் சென்னை செம்பியம் போலீசாரிடம் ரகளை செய்து வாக்குவாதம் செய்துள்ளார்.

பின்பு கைது குறிப்பு அணையில் நாகேந்திரன் கையெழுத்து போடாத நிலையில், அரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த செம்பியம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி சிறை அலுவலரிடம் கைதுக்கான குறிப்பு ஆணையை வழங்கி அவரிடம் கையெழுத்து பெற்று நாகேந்திரனை கைது செய்தனர்.

சார்ந்த செய்திகள்