Published on 07/11/2019 | Edited on 07/11/2019
ரஷ்ய புரட்சி என்பது ஆட்சி அதிகாரத்தை பாட்டாளி வர்க்கம் கைப்பற்றிய நடவடிக்கை மட்டும் அல்ல புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தை சார்ந்தவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு "ஜார்" மன்னனை வீழ்த்திய வரலாறும் அதுவே அப்படிப்பட்ட ரஷ்ய புரட்சியின் தினம் இன்று நவம்பர் 7 ந் தேதி . இந்தியா முழுக்க கம்யூனிஸ்ட்டுகள் இதை கொண்டாடி வருகிறார்கள்.
![RNK at Russian Revolution Day event](http://image.nakkheeran.in/cdn/farfuture/sM71pXTxV_mdQ15fpd8Rh-QusqeqEmnIaZf7h_EHUoM/1573137954/sites/default/files/inline-images/zzzzzz121.jpg)
இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில குழு சார்பில் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு தலைமையில் மற்றொரு மூத்த தலைவரான தா.பாண்டியன் கொடியேற்றி வைத்து ரஷ்ய புரட்சியின் எழுச்சிமிகு வரலாற்றை கூறினார். இந்நிகழ்வில் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.மகேந்திரன், மாநில துணைச் செயலாளர் மு.வீரபான்டியன் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.