Skip to main content

ஆர்கே நகரில் இடைத்தேர்தல் அல்ல, எடைத்தேர்தல்: அன்புமணி ராமதாஸ்

Published on 03/12/2017 | Edited on 03/12/2017
ஆர்கே நகரில் இடைத்தேர்தல் அல்ல, எடைத்தேர்தல்: அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளளை சந்தித்தார்.

அப்போது அவர், 

ஒக்கி புயலால் கன்னியாகுமாரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 10 பேர் பலி ஆகியுள்ளனர். 400 மீனவர்களை காணவில்லை, மீட்பு பணிகள் சரிவர நடக்க வில்லை, 4 நாட்களாக மின்சாரம் இல்லை, புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளில் அரசு கவனம் செலுத்தாமல் " MGR  நூற்றாண்டுவிழா விழாவில் அரசு 500 கோடி செலவு செய்து விரையம் செய்கிறது. கேரளாவில் மீப்பு பணிகள தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், நெல், வாழை, பாக்கு, இரப்பர் மரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது, புயலால் பாதிப்படைந்த குடும்பத்தினருக்கு ரூ10 லட்சம் நிவாரணம் வழங்கவும். பாதிப்படைந்த  பலியான மீனவர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பா.ம.க சார்பில் 'மருத்துவ முகாம் அமைத்து நிவாரண பணிகள் மற்றும் மீட்பு பணிகள் ஈடுபட்டுள்ளோம். 



நிவரண உதவி வழங்க மத்திய அரசு, மாநில அரசு இடையே மதிப்பிடும் அளவு வேறுபாடு உள்ளது. தமிழக அரசு 10 பேர் பலி, 80 மீனவர்கள் காணவில்லை என கூறுகிறது. ஆனால் அங்கு 400 பேர் காணவில்லை, மாநில அரசு 500 கோடி செலவில் மாநாடு நடத்தி பேனர்களுக்கு போலீஸை காவல் காக்கும் நிலையில் உள்ளது. 

பிரதமர், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அத்தியாவாசி பொருட்களான பால் குடிநீர் இன்றி மக்கள் கஷ்டபடுகின்றனர். புயல் வரும் முன்பே அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, கடந்த 2015ம் ஆண்டு புயல், 2016ல் வறட்சி 2017ல் வெள்ளம் அரசு நீர் மேலாண்மையை தெரிந்து கொள்ளவில்லை. மதுரை. தேனி. விருதுநகர் மாவட்ட கட்சியினர் மீட்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். 

விஷால் அரசியலுக்கு வரட்டும், ஆர்கே நகரில் இடைத்தேர்தல் அல்ல, அங்கு எடைத்தேர்தல் நடைபெறகிறது, ஆர்.கே நகரில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. ஆனால் தமிழக அரசு ஒரு மாதம் ஒட்டு கேட்டு நிற்கும். நிர்வாகம் வேடிக்கை பார்க்கும். அடுத்து வரும் சாகர் புயலுக்கு முன்பே அரசு தயாராக வேண்டும். இவ்வாறு கூறினார். 

சார்ந்த செய்திகள்