Skip to main content

அதிமுக முன்னாள் அமைச்சரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
ADMK ex-minister's bail plea adjourned

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர்' என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை ஜூன் 25 ஆம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதனால் தொடர்ந்து தலைமறைவாக உள்ள எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டிவரும் நிலையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரைப் பிடிக்க முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (02.07.2024) மீண்டும் ஒரு முன்ஜாமீன் மனுவைக் கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தன்னுடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. எனவே அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை உடனிருந்து கவனிக்க வேண்டி இருப்பதால் சிபிசிஐடி போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்படிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று (03.07.2024) நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சண்முகசுந்தரம் இந்த மனு மீதான விசாரணை நாளை (04.07.2024) ஒத்திவைக்கப்படுகிறது எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

கரூரில் சிபிசிஐடி விசாரணை நிறைவு

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
CBCID investigation completed in Karur

கரூரில் சிபிசிஐடி போலீசார் 3 இடங்களில் சோதனையில் ஈடுபட்ட நிலையில் தற்போது சோதனை முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்துள்ளனர்' என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு 14 தனிப்படைகள் அமைத்து இந்தியா முழுவதும் தேடிவந்த நிலையில் இன்று காலை முதல் அவருடைய ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

CBCID investigation completed in Karur

இன்று கரூர் மணல்மேடு அடுத்துள்ள கூலிநாயக்கனூர் என்ற இடத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளரும், பெட்ரோல் பங்க் ஊழியருமான யுவராஜ் என்பவரது வீட்டில் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் இந்தச் சோதனையானது நடைபெற்றது. அதேபோல் தோட்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பேரூர் அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் செல்வராஜ் மற்றும்  புதூர் பகுதியில் உள்ள ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வீடுகளில் சோதனையானது நடைபெற்றது. இந்நிலையில் திருச்சி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் 2 மணி நேரங்களுக்கு மேலாக நடத்திய விசாரணையை முடித்துக் கொண்டு புறப்பட்டனர். 

Next Story

பேருந்தில் வந்திறங்கிய சிபிசிஐடி போலீசார்; கரூரில் பரபரப்பு

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
 CBCID policemen who arrived by bus; There is excitement in Karur

கரூரில் மூன்று இடங்களில் சிபிசிஐடி போலீசார் திடீரென அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்துள்ளனர்' என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு 14 தனிப்படைகள் அமைத்து இந்தியா முழுவதும் தேடிவந்த நிலையில் இன்று காலை முதல் அவருடைய ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 CBCID policemen who arrived by bus; There is excitement in Karur

இன்று கரூர் மணல்மேடு அடுத்துள்ள கூலிநாயக்கனூர் என்ற இடத்தில் உள்ள அவருடைய ஆதரவாளரான யுவராஜ் என்பவரது வீட்டில் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிபிசிஐடி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் காவல்துறைக்கான பேருந்தில் வந்திறங்கிய நிலையில், சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. அதேபோல தோட்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வீடுகளில் சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.