![Vijay's reaction to the girl's act in function](http://image.nakkheeran.in/cdn/farfuture/rZjE-G8ly5I7Vlur2jEy7YOsaWuRPW68cRR7bRovzgY/1720003895/sites/default/files/inline-images/vjkuzni_0.jpg)
இந்தாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் சான்றிதழும், ஊக்கத்தொகையும் இரண்டு கட்டங்களாக வழங்குவதாக அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி முதற்கட்டமாக தென்மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கினார்.
இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சை, திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு, விஜய் சான்றிதழையும், ஊக்கத்தொகையும் வழங்கி வருகிறார்.
இதில் பரிசு பெற்ற மாணவியின் குடும்பத்தில் வந்த சிறுமி, முட்டி போட்டுக்கொண்டு விஜய்யிடம் பக்கொடுக்க காத்திருந்தார். இதனைப் பார்த்த விஜய், சில வினாடிகள், அந்தச் சிறுமியை நேருக்கு நேர் பார்த்தார். இதனையடுத்து, விஜய்யும் முட்டிப் போட்டுக்கொண்டு அந்தச் சிறுமி கொடுத்தப் பூவை வாங்கிக் கொண்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.