Skip to main content

ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Hemant Soran claimed the right to rule

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார். இந்தச் சூழலில் இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி (31.01.2024) விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில் ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றார். இத்தகைய சூழலில் கடந்த 28 ஆம் தேதி (28.06.2024) தான் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கி அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Hemant Soran claimed the right to rule

இந்நிலையில் ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ராஞ்சியில் உள்ள ராஜ்பவனுக்கு வந்தார். அப்போது ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அதே சமயம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

ராஜினாமா கடிதத்தை அளித்தது குறித்து ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் கூறுகையில், “சில நாட்களுக்கு முன், நான் முதல்வராக்கப்பட்டேன். அதன் மூலம் மாநில பொறுப்பு கிடைத்தது. ஹேமந்த் சோரன் திரும்பிய பின் எங்கள் கூட்டணி இந்த முடிவை எடுத்து ஹேமந்தை தேர்வு செய்தோம். இப்போது சோரனுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்” எனத் தெரிவித்தார். மேலும் ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய பிறகு ஹேமந்த் சோரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதல்வர் (சம்பை சோரன்) உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். எல்லாவற்றையும் விரிவாகச் சொல்வோம். இதில் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Hemant Soran sworn in as Chief Minister of Jharkhand

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார். இந்தச் சூழலில் இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி (31.01.2024) விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில் ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றார். இத்தகைய சூழலில் கடந்த 28 ஆம் தேதி (28.06.2024) தான் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கி அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

Hemant Soran sworn in as Chief Minister of Jharkhand

அதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை நேற்று (03.07.2024) அளித்தார். அதே சமயம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார். இந்நிலையில் ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் மாநில முதல்வராக ராஞ்சியில் உள்ள ராஜ்பவனில் இன்று (04.07.2024) மாலை 5 பதவியேற்றார். அப்போது அவருக்கு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தப் பதவியேற்பு விழாவில் ஹேமந்த் சோரன் தந்தையும் மற்றும் ஜே.எம்.எம். கட்சியின் தேசிய தலைவருமான ஷிபு சோரன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'வெளியே வந்த ஹேமந்த் சோரன்'-தமிழக முதல்வர் வரவேற்பு

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
'Hemant Soran who came out'- Tamil Chief Minister's welcome

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார். இந்தச் சூழலில் இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இதனையடுத்து கடந்த ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ‘ஜனவரி 20 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம்’ எனச் சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன்படி ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜனவரி 31 ஆம் தேதி  விசாரணை மேற்கொண்டனர்.

அதேசமயம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையைக் கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர், ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றார். தொடர்ந்து ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் நடைபெற்று வந்தது. இறுதியாக ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் இன்று விடுதலையானார். இதனை அவரது கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனை வரவேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், 'ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் முதல்வர் பதவியை பறித்து சிறையில் அடைத்து பரப்புரை செய்வதை பாஜக அப்பட்டமாக தடுத்தது. ஹேமந்த் அவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறேன்' என தெரிவித்துள்ளார்.