![Repair in final machine ... Delay in BJP L Murugan contesting constituency!](http://image.nakkheeran.in/cdn/farfuture/l2baOeYeplMM6qVkIsvJIkhSk6dC20Ltk4wQEQ7N8fo/1619961874/sites/default/files/inline-images/8888_4.jpg)
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும் பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 157 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 77 சட்டமன்றத் தொகுதிகளிலும் முன்னனியில் உள்ளது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் இறுதிசுற்று வாக்கு எண்ணிக்கையில் கடைசி இயந்திரம் பழுதாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எல்.முருகன் 608 வாக்குகள் பின்னடைவில் உள்ள நிலையில் இயந்திர கோளாறால் தாராபுரம் தொகுதி தேர்தல் இறுதி நிலவரம் தெரிய தாமதமாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.