காலா படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை Y.M.C.A. மைதானத்தில் நடைபெற்றது. அதில் ரஜினி பேசியது,
இதை பார்க்கும் போது எனக்கு இசை வெளியீட்டு விழா போன்றே தெரியவில்லை. படத்தின் வெற்றி விழா போன்று உள்ளது. நான் கடைசியாக கொண்டாடிய கொண்டாடிய வெற்றி விழா சிவாஜி படத்தின் வெற்றி விழா. அந்த விழாவிற்கு மதிப்பிற்குரிய பெரியவர் டாக்டர். கலைஞர் வந்து விழாவை சிறப்பித்தார்கள். அப்போது அவர் பேசிய கருத்துக்கள் அவரது குரல் அதை என்றைக்கும் மறக்க முடியாது. 75 ஆண்டுகள் தமிழ்நாடு முழுவதும் ஒலித்த அவருடைய குரலை கேட்க வேண்டுமென்று கோடானு, கோடி மக்கள் காத்துட்டு இருக்காங்க. அதில் நானும் ஒருவன். அந்த குரலை சீக்கிரம் கேட்க வேண்டுமென்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.
லிங்கா கதை நீர் சேமிப்பு பற்றிய கதை. நதி என்றாலே எனக்கு அதுல தனி ஈடுபாடு வந்துவிடும். இமைய மலைக்கு செல்வதே கங்கையை பார்ப்பதற்குதான். சில இடங்கள்ல அது ரௌத்திரமா வரும், சில இடங்கள்ல அமைதியா வரும். அதை பார்க்கும்போதே ரொம்ப அற்புதமா இருக்கும். என் வாழ்க்கையின் ஒரே கனவு நதிகள் இணைப்பு. தென்னிந்திய நதிகளை மட்டுமாவது இணைக்க வேண்டும். அதன்பின் நான் கண் மூடினாலும் பரவாயில்லை.