Skip to main content

கந்துவட்டி கொடூரம்... விசைத்தறி தொழிலாளி தற்கொலை...!

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மகளிர் குழுக்கள் மூலம் கடன் வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மகளிர் குழுக்கள் மூலம் ஒரு நபர் கடன் பெற்றால் அவர் திருப்பி செலுத்தவில்லை என்றால் அக்குழுவில் மீதி உள்ள பெண்கள் கடன் செலுத்தாத பெண்ணின் வீட்டிற்கு நேரடியாக சென்று பணத்தை வசூலிக்கும் முறை உள்ளது. ஒரு குழுவில் கடன்பெற்று அந்த கடனை அடைக்க முடியாமல் வேறுகுழுவில் கடன் வாங்கி ஏற்கனவே கடன்பெற்ற குழுவிற்கு பணத்தை செலுத்துவதும், அதற்கு வட்டிக்கு வட்டி என அதிகரித்து  மேலும் சில குழுக்களில் பணம் பெறுவதும் இப்படி பல்வேறு மகளிர் குழுக்களில் பணம் வாங்கி அதை திருப்பி செலுத்த முடியாமல் பலர் தற்கொலை முடிவை நாடி வருகிறார்கள். இப்படி குமாரபாளையத்தில் மட்டும் கடந்த 2 மாதத்தில் ஆறு தற்கொலை நடந்துள்ளது.  

 

 Electricity worker commits suicide ...


இதன் தொடர்ச்சியாக குமாரபாளையம் விட்டலபுரியை  சேர்ந்த ராஜு என்பவர் விசைத்தறி தொழிலாளி. இவர் மனைவி விசாலாட்சி 2. இவர்களுக்கு ஆண் குழந்தைகள் உள்ளது. ராஜு விசாலாட்சி தம்பதியினர் ஒரு மகளிர் குழுவில் கடன்பெற்று அதை அடைக்க முடியாமல் மற்றொரு மகளிர் குழுவில் கடன்வாங்கி இப்படி நான்கைந்து குழுவில் கடன்வாங்கி பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

கடும் நெருக்கடிக்கு ஆளான ராஜு நேற்று இரவு தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜு போல ஏராளமானபேர் இந்த மகளிர் குழு என்கிற நவீன கந்துவட்டி கும்பலால் தற்கொலை செய்துள்ளார்கள். இதற்கு ஒரு முடிவும் தீர்வும் வேண்டுமென குமாரபாளையத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் இன்று காலை முதல் போராட்டத்தில் இறங்கி வருகிறது. இதனால் குமாரபாளையம் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்