![Rajendra Balaji who escaped in different cars! - Intensive search of eight personnel!](http://image.nakkheeran.in/cdn/farfuture/ki30by2uD9exEvG9Jk_9cUgitBEeJGaxMAf_FM-J6KI/1640014120/sites/default/files/inline-images/ktr4343433.jpg)
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அளித்த தகவல் இது, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த டிசம்பர் 15- ஆம் தேதி முன்னாள் அமைச்சர் K.T.ராஜேந்திரபாலாஜி மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் பெறுவதற்கு அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த 17-12-2021 ம் தேதி அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இத்தகவலறிந்து அன்றைய தினம் அவசரமாக விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு காரில் ஏறிச் சென்ற ராஜேந்திரபாலாஜி, வெவ்வேறு கார்களில் மாறி மாறிச் சென்று தலைமறைவாகியுள்ளார். இவரைக் கைது செய்ய விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவில், 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜேந்திர பாலாஜி தீவிரமாகத் தேடப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.