Published on 04/10/2020 | Edited on 04/10/2020
![Rajamani Thangapandian passed away](http://image.nakkheeran.in/cdn/farfuture/5SlqvrkTFhe9oZBfjXmRWwbCCa0kzXXN9yTeEYVVYF0/1601826187/sites/default/files/inline-images/Adafg100a8e6172a29ca4517993.jpg)
முன்னாள் திமுக அமைச்சர் தங்கபாண்டியனின் மனைவியும், விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் தாயாருமான ராஜாமணி தங்கபாண்டியன் (வயது84) உடல்நலக்குறைவு காரணமாக சற்றுமுன் காலமானார்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள, அவரது சொந்த கிராமமான மல்லாங்கிணறில், நாளை மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெறவிருக்கிறது.