தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்கள் மூன்று நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, இன்று கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும். அதேபோல் ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் ஒன்பதாம் தேதி வரை தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை ஒட்டிய அல்லது சற்று அதிகமாக இருக்கக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக, கடலோரம், மன்னார் வளைகுடா பகுதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் நாகை, திருவாரூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.