Published on 11/09/2023 | Edited on 11/09/2023
![nn](http://image.nakkheeran.in/cdn/farfuture/9VhBnRy1ZvbGu-qVvOSmmgmlL1T-jiwKmjuaVPAKSAc/1694433024/sites/default/files/inline-images/a1429.jpg)
தமிழகத்தில் சில நாட்களாகவே பரவலாக மிதமான மழை பெய்து வரும் நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அறிவிப்பின்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாமக்கல், கடலூர், தென்காசி மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம், ஆத்தூர், பரனூர், வல்லம், வெண்பாக்கம் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பொழிந்து வருகிறது.