Skip to main content

அதிமுகவின் கே.பி.பி.பாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு!    

Published on 12/08/2022 | Edited on 12/08/2022

 

 Raid in places related to KPP Bhaskar of AIADMK!

 

 

சமீப காலமாகவே முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தி வந்த நிலையில் தற்போது அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

 

நாமக்கல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக 315 சதவீதம் சொத்து சேர்த்த புகாரில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. நாமக்கல்லில் 24, மதுரை, திருப்பூரில் தலா ஒரு இடம் என மொத்தம் 26 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. பாஸ்கர் எம்எல்ஏவாக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 4.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த அதிரடி ரெய்டு நடைபெற்று வருவது குறிப்பிடத்தகுந்தது.

 

சார்ந்த செய்திகள்