Skip to main content

சிறைப்பணியாளர்களை மிரட்டும் சிறை உளவுப்பிரிவு ! 

Published on 13/07/2019 | Edited on 13/07/2019

 


வெளி உலகில் தவறு செய்யும் மனிதர்கள் திருந்தும் நோக்கத்தோடு சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்களுக்கு சேவை செய்யும் வேலையை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அந்த கைதிகளை கண்காணிக்க வேண்டியவர்கள் கைதிகளோடு கூட்டு சேர்ந்து கொண்டு சிறை பணியாளர்களை பழி வாங்குகிறார்கள் என்று சிறைச்சாலையில் உள்ள மூத்த பணியாளர்கள் நக்கீரனிடம் குமுறினார்கள். இதை விரிவாக அப்படியே தருகிறோம்.

 

p

 

சிறைத்துறையில் பணி புரிந்து வரும் (டெபுட்டேஷன் ) உளவு மற்றும் விழிப்பு பிரிவில் 23 பேர்கள் காவல்துறையை சார்ந்தவர்கள். மாற்றுபணியில் பணி புரிய அனுப்பப்படும்  இவர்கள் வெளியில் இருந்து வருபவர்கள் மூன்றாண்டுகள் மட்டுமே சிறைக்குள் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்பது அரசாணை எண் 111 சொல்கிறது. 

 

ஆனால் சிறைத்துறையில் மட்டும் சிலர் சுமார் 12 ஆண்டுகளாக பணியாற்றி வருவதும், எந்த நோக்கத்திற்காக அரசாணை எண் 23 ன் படி பணியமர்த்தப்பட்டார்களோ அதனை செய்யாமல், சிறை பணியாளர்கள் மீது அவதூறான தகவல்களை துறைத் தலைமைக்கு அனுப்பி பணியாளர்களை நீண்ட தூரம் இடமாற்றம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இதனால் சிறை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்படுவதுடன் அவர்களது குழந்தைகளின் கல்வி மிக மோசமாக பாதிக்கப்படுகிறது. தங்களுக்கு தேவையான அல்லது சாதகமான பணியாளர்களை அவர்கள் விரும்பும் இடத்திற்கு இடமாற்றம் செய்யவேண்டும் என்பதற்காகவும் சில தவறான, பொய்யான, எதுவும் கிடைக்காத போது ஜாதிய பிரச்சனை எனக்கூறி தவறான அறிக்கை கொடுத்து பணியாளர்களை தெற்கும், வடக்கும், என இடமாற்றம் செய்கின்றனர். 

 

சிறையில் பணியாற்றும் சில அதிகாரிகளின் ஆலோசனையுடனும் இந்த நாடகம் அரங்கேறுகிறது என்று குமுறுகிறார்கள். அத்தோடு தீவிரவாத, நக்ஸலைட்டுகள், ரவுகள் உள்ளிட்ட கைதிகளை கண்காணித்து அவர்களது நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்காமல் சிறைக்காவலர்களை கண்காணிக்கவே செய்கிறார்கள். இவர்கள் இப்படி சுயநலமாக செய்படுவதால் தான் பட்டப்பகலில் புழல் மத்திய சிறை ஒன்றில் இரண்டு ஆயுள் தண்டனை கைதிகள் சக கைதிகளால் கொலை செய்யப்பட்டார்கள். 

 

பல வழக்குகள் நிலுவையில் இருந்த ஒரு விசாரணைக்கைதி பதிவேடுகளை அவனாகவே திருத்தி பிணையில் விடுவிக்கப்பட்டார். தப்பியோடிய நிகழ்வும், சரணடைந்த கொலை குற்றகைதி மூன்றே நாளில் பிணையில் விடுவிக்கப்பட்டதும், வட இந்திய திருட்டு வழக்கு கைதியை விடுதலை செய்தும், விடுதலை செய்யப்பட்டவர்கள் சிறையில் இல்லாத நிலையிலும் அவர்களுக்கு ஆயுத படையில் வழிக்காவல் கேட்ட வினோதமெல்லாம் புழல் சிறை 2 ல் நடைபெற்று உள்ளது.

 

சிறைப்பணியாளர்களின் பணிக்கு பாதுகாப்பே முக்கியமானது. விதிப்படி காவல்துறையினர் சிறைக்குள் அனுமதிக்க கூடாது. ஆனால் அவர்கள் செல்போனுடன் சிறைக்குள் உலாவருவதும், சிறை சார் நிலைப் பணியாளர்களை மிரட்டுவது, என அனைத்து நடவடிக்கைகளும் நடந்து கொண்டிருக்கிறது. 

 

3 வருடம் தான் duputation duty ஆனால் 12 வருசமா காவல்துறையில் இருந்து சிறைத்துறையில் பணி செய்கிறார்கள் நல்லா வருமானம் கிடைக்கிறது . இதனால் அதிகாரிகள் துணையோடு சிறைத்துறை பணியாளர்களை மிரட்டியே பணம் சம்பாதித்து இங்கேயே இருக்கிறார்கள். 

 

கைதிகளை கண்காணிக்க தான் இவர்கள் பணி கைதிகள் ஏதாவது சதி வேலை செய்யும் முன் முன்கூட்டியே நடக்க இருப்பதை கண்டறிந்து சிறை அதிகாரிகளிடம் தகவல் கொடுக்கணும் ஆனால் இவர்கள் சிறை காவலர்களை பலி வாங்கும் நோக்கத்தோடு பணியாளர்கள் மீது பொய்யான தகவல் தலைமை இடத்துக்கு அனுப்பி பணியிட மாற்றம் செய்யும் அளவுக்கு அதிகாரம் எங்கு இருந்து வந்தது என்று தெரியவில்லை. இதனால் சிறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் சிறையில் பணிபுரியும் சிறை உளவு விழிப்பு போலீஸ் கும் மோதல் உருவாகும் நிலை உருவாக்கி உள்ளது என்கிறார்கள் சிறையில் உள்ள மூத்த பணியாளர்கள்.’’


 

சார்ந்த செய்திகள்