Skip to main content

கவினை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் எதிர்பார்க்காத போட்டியாளர்!

Published on 27/09/2019 | Edited on 27/09/2019

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 95 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி,சேரன் மற்றும் கவின் இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் முகேன் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

 

big boss



தற்போது பிக் பாஸ் வீட்டில் 5 போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். இந்த வாரம் முகேனை தவிர மற்ற ஐந்து போட்டியாளர்களும் இந்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். பிக் பாஸ் போட்டியாளர்களிடம் ஒரு கேள்வியை கேட்கிறார். அதில் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் 5 லட்சம் கொடுத்து இதை யாரவது ஒருவர் பெற்றுக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறலாம் என கூற, என்னை இந்த வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை, எனவே நான் வெளியேறுகிறேன் என கூறிவிட்டு கவின் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து யார் செல்வார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.மேலும் தற்போது நிலவரப்படி வாக்குகளில் ஷெரின் கடைசி இடத்தில் இருப்பதால் அவர் வெளியேற அதிக வாய்ப்பு  உள்ளது என்று கூறுகின்றனர். 


அதே போல் கவினும், சாண்டியும் பிக் பாஸ் வீட்டில் நல்ல நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரிந்தது. இதனால் கவின் வெளியேறுவதற்கு முன்பு சாண்டி அவருடன் இந்த முடிவை ஏன் எடுத்தாய் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீ இப்படி முடிவெடுத்தால், நானும் வெளியே போறேன். எனக்கு ஐந்து லட்சம் கொடுங்க என சாண்டி சண்டை போட்டுள்ளார். இன்னும் 3 நாள் இருப்பேன், அதற்கு பிறகு சுவர் ஏறி கூட குதிச்சு வெளிய வருவேன் என சாண்டி கூறினார். இதனையடுத்து நட்புக்காக அவரும் இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒரு வேளை மக்கள் அவருக்கு அதிக வாக்களித்து வீட்டில் இருக்க வைத்தால் தொடர்ந்து விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுப்பி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்