தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிக்கான மறைமுகத் தேர்தல் இன்று (11.01.2020) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு காரணங்களால் 24 ஒன்றியங்களில் மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக வெற்றி பெற்றவர்களின் விவரங்கள்!
திருவள்ளூர் மாவட்டம்: 14 ஒன்றியங்களில் திமுக- 6, அதிமுக- 4ல் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 6 ஒன்றியங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம்: 11 ஒன்றியங்களில் திமுக-7, அதிமுக-4 ஒன்றியக்குழு தலைவர்கள் பதவிகளில் வெற்றி.
கடலூர் மாவட்டம்: 14 ஒன்றியங்களில் அதிமுக- 10, திமுக- 2ல் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள நல்லூர், மங்களூரில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம்: 12 ஒன்றியங்களில் அதிமுக- 6, திமுக- 4, அமமுக- 1 இடத்தில் வெற்றி.
நாமக்கல் மாவட்டம்: 15 ஒன்றியங்களில் அதிமுக- 10, திமுக- 3, சுயேச்சை- 1 இடத்தில் வெற்றி. மீதமுள்ள ஒரு இடத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம்: 8 ஒன்றியங்களில் அதிமுக- 3, திமுக- 1, பாஜக- 1ல் வெற்றி. மூன்று ஒன்றியங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம்: 6 ஒன்றியங்களில் அதிமுக- 5, திமுக- 1ல் வெற்றி.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, சிவகங்கையில் கண்ணங்குடி ஒன்றியத் தலைவர் பதவிகளை அமமுக கைப்பற்றியது.
![Postponement of indirect elections in 24 unions!](http://image.nakkheeran.in/cdn/farfuture/X3_u-qcbzYZj5ubosckm9r435Ftk-6KxUjq0f9GYrIE/1578738959/sites/default/files/inline-images/SE34.jpg)
மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள இடங்கள்:
திருவாரூர் மாவட்டத்தில் 15 இடங்களில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அச்சுதமங்கலம் ஊராட்சியில் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மகாராஜபுரம் ஊராட்சியில் 6 வார்டு உறுப்பினர்களில் 2 வார்டு உறுப்பினர்கள் மட்டுமே வந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: கோவில்பட்டி ஒன்றியத்தில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தேர்தல் நடத்தும் அலுவலர் உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் தேர்தல் ஒத்திவைப்பு.
திருவள்ளூர், விருதுநகர் மாவட்டங்களில் தலா 4 ஒன்றியங்களில் மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு.
கடலூர், திருவண்ணாமலை, சேலம், தேனி ஆகிய மாவட்டங்களில் தலா மூன்று ஒன்றியங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடியில் தலா ஒரு ஒன்றியங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய குழு தலைவருக்கான மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.