![mani](http://image.nakkheeran.in/cdn/farfuture/L5vBg9LjySeccD6qnYpLp_sLTyrVPBQbhSoobZyVsAU/1533347666/sites/default/files/inline-images/p-maniyarasan%20dm.jpg)
கூடுதல் பதவி பெற பொன்.ராதா, தமிழிசை ஆகியோர் தமிழகத்துக்கு பச்சைத்துரோகம் இழைத்து வருகின்றனர் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
கூடுதல் பதவி பெறுவதற்காக பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன் எல்லாம் பச்சையாக இனத் துரோகம் செய்கிறார்கள். கூடுதல் பதவி பெறுவதற்கு எவ்வளவு இனத் துரோகம் செய்தாலும் டெல்லி பாஜக அரசு உங்களுக்கு உயர்ந்த பதவி கொடுக்காது. மன்னின் மக்களோடு இருங்கள். தமிழ்நாட்டில் தொடக்கத்திலேயே பாஜக தலைமை இப்படி செய்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் பாஜக துளிர்க்கவே முடியாது.
பிரதமரை சந்தித்து காவிரிக்கான பேச்சுவார்த்தை நடத்த அல்லது மனு கொடுக்க அனுமதி வாங்க கூறுங்கள். பிரதமரை சந்தித்து ஒரு மனு கொடுத்து பேசுவதற்கு கூட தயாராக இல்லை. உதைக்கும் காலை முத்தமிடும் பழக்கம் கொண்ட ராஜேந்திர பாலாஜியை இதற்கெல்லாம் பதில் சொல்ல சொல்லுங்கள்.
வரும் 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி விழாவை புறக்கணிக்கலாம். அதுபோல் மம்தா பானர்ஜி செய்துள்ளார். நீங்கள் அந்த விழாவை புறக்கணித்தால், தன்மானமுள்ள தமிழர் உரிமையை பாதுக்கக்கூடிய ஒரு ஆட்சி என்று ஒரு மதிப்பு உயரும். மக்களிடைய செல்வாக்கு உயரும். பச்சை கொடி காட்டினால் தமிழ் இனம் தூக்கி எரிந்து விடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.