Skip to main content

டிஜிட்டல் வசந்த மாளிகை! வரவேற்ற ரசிகர்கள்!

Published on 21/06/2019 | Edited on 21/06/2019

 


     எத்தனை புதிய திரைப்படங்கள் தினம் வந்தாலும் பழைய திரைப்படங்கள் மக்கள் மனதில் நிற்கிறது. அதிலும் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் படங்கள் தமிழக மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம்பிடித்துள்ளது. அதனால் தான் பழைய படங்களை புதிய தொழில்நுட்பத்துடன் மீண்டும் வெளியிட்டு வருகின்றனர். அப்படி வெளியிடப்படும் பழைய படங்கள் மீண்டும் திரையரங்குகளில் நீண்ட நாட்கள் ஓடுகிறது. 

 

v

 

இந்த நிலையில் தான் 29 .9 .1972 ஆம் ஆண்டு நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்து தமிழ்நாட்டில் 150  நாளை கடந்தும், இலங்கையில் ஒரு வருடம் ஓடி வெற்றி கண்ட படம் வசந்தமாளிகை. மீண்டும் நவீனமயமாக்கப்பட்ட டிஜிட்டல் பதிப்பில் இன்று புதுக்கோட்டை வெஸ்ட் திரை அரங்கத்தில் திரையிடப்பட்டதை அறிந்து அங்கு வந்த சிவாஜி ரசிகர் சங்கத் தலைவர் அ.சுப்பையா தலைமையில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் வாழ்க்கை குறித்த புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.

 

திரையரங்கம் வந்த ரசிகர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திரையரங்கத்தில் படம் பார்க்க வந்த சிவாஜி ரசிகர்களை  வாழ்த்தி புத்தகம் வழங்கி சிறப்பித்தார். இதில், நகரத்தலைவர் பா. அசோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
        

சார்ந்த செய்திகள்