Published on 18/10/2018 | Edited on 18/10/2018

நேற்று புதன்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாம்பரத்திலிருந்து உளுந்தூர்ப்பேட்டை வரை பயணம் செய்து அதிமுக கொடிகளை ஏற்றிச் சென்றார். அவருக்காக கட்டிய அதிமுக கொடிகளும், வைக்கப்பட்ட பேனர்களும் இன்றுவரை அகற்றப்படவில்லை.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதுராந்தகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று சென்றார். மதுராந்தகத்தில் உக்கம்சந்த் நடத்தும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார். ஆனால், அவர் செல்லும் வழிகளில் திமுக கொடிகள்கூட நடப்படவில்லை என்று கட்சியினர் புலம்புகிறார்கள். காஞ்சி தெற்கு மாவட்டத்தில் நிகழ்ச்சிக்கு செல்லும் ஸ்டாலினை வரவேற்கும் கடமை காஞ்சி வடக்கு மாவட்டத்திற்கு இல்லையா என்றும் கேட்கிறார்கள்.
பேனர்தான் வைக்கக்கூடாது என்றார் ஸ்டாலின். அதற்காக கொடிகளுமா கட்டக்கூடாது என்றார் என்பதே அவர்களுடைய கேள்வி.