Skip to main content

போதைப் பொருள் விற்பனை; மருத்துவ மாணவர்கள் கைது

Published on 12/01/2023 | Edited on 12/01/2023

 

 police arrested by chidambaram mbbs students  

 

சிதம்பரம் அண்ணாமலை நகர் அருகே உள்ள சிவகாமி நகரில் மருத்துவ மாணவர்கள் தங்கிப் பயிலும் வீட்டில் போதைப்பொருள் விற்பனை செய்வதாகப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிதம்பரம் ஏஎஸ்பி பி.ரகுபதி உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் மற்றும் போலீசார், சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்கள் தங்கியுள்ள சிவகாமி அம்மன் நகரில் உள்ள வீட்டில் புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது வீட்டிலிருந்து 6 கிலோ போதைப் பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.

 

மேலும் இது தொடர்பாக வீட்டில் தங்கியிருந்த நான்காம் ஆண்டு எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்களான வாணியம்பாடி நியூ டவுன் புதுத் தெருவைச் சேர்ந்த இளங்கோ மகன் நெடுஞ்செழியன் (வயது 24), சென்னை அடையாறு காந்தி நகரைச் சேர்ந்த நஜூபுதீன் மகன் ஹபீஸ் (வயது 23), எம்பிபிஎஸ் பயிற்சி மருத்துவரான கள்ளக்குறிச்சி ராமச்சந்திரன் நகரைச் சேர்ந்த குணசேகரன் மகன் ராகுல் (வயது 25) மற்றும்  சிதம்பரம் எம்.கே.தோட்டம் பகுதியைச் சேர்ந்த மணிமேக் மகன் ஆகாஷ் (22) ஆகிய 4 பேர் மீது அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

மேலும் இவர்கள் மொத்தமாக போதைப் பொருளை வாங்கி கல்லூரி மாணவர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இவர்கள் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்று வருகிறார்கள். இதில் ஆகாஷ் என்பவர் அண்ணாமலை பல்கலைக்கழக நான்காம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்