Skip to main content

ஆனி மாத அமாவாசை: பவானி கூடுதுறையில் குவிந்த மக்கள்

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

nn

 

ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் அமாவாசை தினத்தன்று உள்ளூர், வெளியூர் வெளி மாநில பக்தர்கள் வருகை தந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் என பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.

 

இந்நிலையில் இன்று ஆனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர். ஆனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவிலின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்