Skip to main content

ஓபிஎஸ் தம்பி   ஆதரவாளர்கள் தாக்கியதால் நகர செயலாளர் படுகாயம்!

Published on 22/10/2018 | Edited on 22/10/2018
tt

 

துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் சமீபகாலமாகவே முல்லைப் பெரியாறு ஆற்றில்  மணல் கடத்துவது ஒரு தொழிலாளக இருந்து வந்தது.
      இந்த  மணல் கடத்தல் தொழிலை ஓபிஎஸ்  தம்பியான ஓ.ராஜா வின் ஆதரவாளர்கள் செய்து வருகிறார்கள் என்று  ஏற்கனவே டிடிவி ஆதரவாளரும், ஆண்டிபட்டி சட்டமன்ற  உறுப்பினருமான தங்க தமிழ் செல்வன் மற்றும் தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்த  பெரியகுளம் நகர செயலாளர் துரை உள்பட சிலர் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம் புகார்  கூறி இருக்கிறார்கள்.

 அதன் அடிப்படையில்  கலெக்டர் பல்லவி பல்தேவ்வும் அதிகாரிகளை உசிப்பி விட்டு  அதிரடி நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார்.  அதன் அடிப்படையில் மணல் கடத்தலும் ஓர் அளவுக்கு 
தடுக்கப் பட்டு வருகிறது. 


      அதை கண்டு தங்கதமிழ்செல்வனும் கூட மணல் கடத்தலுக்கு நடவடிக்கை எடுத்த கலெக்டர் பல்லவி பல்தேவ்வை பாராட்டி  கடந்த மாதம்   பத்திரிகையாளர்களுக்கு பேட்டியும் கொடுத்தார் அதை கண்டு ஓபிஎஸ்சும், அவருடைய தம்பி ஓ.ராஜாவும்  டென்ஷன்  ஆகி விட்டனர். அது போல் ஒஓ.ராஜாவின் ஆதரவாளர்கள் புகார் கொடுத்தவர்கள் மேலேயும், அதிகாரிகளை தூண்டி விட்டு நடவடிக்கை எடுக்க சொன்ன கலெக்டர் மேலேயும் 
அதிருப்தியில் இருந்து வந்தனர்
 .

      இந்த நிலையில் தான் பெரியகுளம் வீட்டில் இருந்து கடைவீதி வழியாக வந்து கொண்டு இருந்த  தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பெரியகுளம் நகர செயலாளர் துரையை திடீரென ஓ.ராஜா வின் ஆதரவாளர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் மடக்கி  ஆயுதங்களால்  தாக்கி விட்டு தலைமறைவாகி விட்டனர். 


இதனால் பாதிக்கப்பட்ட துரை உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார்.  இச் சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்