Skip to main content

5-வது நாளாக நீடிக்கும் லாரிகள் போராட்டம் - பல கோடி ருபாய் காய்கறிகள் தேக்கம்

Published on 24/07/2018 | Edited on 24/07/2018
tr

 

லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் 5 வது நாளாக நீடித்து வரும் நிலையில் கோவையிலிருந்து மினி லாரி மற்றும் ஆட்டோக்கள் மூலம் காய்கறிகள் கொண்டு செல்லப்படுவதால் பல கோடி ரூபாய் மதிப்பிலான  காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன.


பெட்ரோல் டீசல் விலை உயர்வு தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று ஐந்தாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.தமிழகம் முழுவதும் நான்கரை லட்சம் லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதால் பலகோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக கோவையில் இதுவரை சுமார் 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

 

கேரளா,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கோவைக்கும் கோவையிலிருந்து பிற மாநிலங்களுக்கும் சுமார் 300 க்கும் மேற்பட்ட லாரிகளில்  காய்கறிகள் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.நேற்று வரை ஒரு சில காய்கறி லாரிகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முழுவதுமாக லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் கோவை எம்.ஜி.ஆர்.காய்கறி மொத்த சந்தையிலிருந்து மினி லாரி,சரக்கு ஆட்டோக்கள் மற்றும் பிக் அப் வாகனங்கள் மூலம் காய்கறிகள் கொண்டு செல்லப்படுவதனால் சுமார் 300 டன் எடையிலான காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன.

 

இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.மேலும் சிறிய வாகனங்களில் காய்கறிகள் ஏற்றி விடப்படுவதால் அதிக வாடகை மற்றும் ஆட்கள் கூலி ஆகியவற்றின் காரணமாக  தக்காளி,வெங்காயம்,பூண்டு,மற்றும் பல்வேறு காய்கறிகளின் விலை கிலோவுக்கு 5 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.இதே நிலை மேலும் இரு தினங்களுக்கு நீடிக்கும் நிலையில் இந்த விலை உயர்வு இரு மடங்காகும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.எனவே லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய மாநில அர்சுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்