காத்திருந்த அமைச்சரை கழட்டிவிட்ட ஓ.பி.எஸ்.!
ஆர்.கேநகர் தேர்தல் சம்மந்தமாக அதிமுக மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா தனது வடக்கு சட்டமன்ற அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்.
ஓ.பி.எஸ். மதுரை விமானம் நிலையம் வருவதை அறிந்து தொலைபேசியில் புறநகர் கூட்டம் இருப்பதால் என்னால் தங்களை வரவேற்க இயலவில்லை என்றதும், உங்களது கூட்டத்திற்க்கு நேரில் நான் வருகிறேன் என்றார் ஓபிஎஸ். நேற்றிரவு 7 மணி விமானத்தில் மதுரை வந்த அமைச்சர் உதயக்குமார், வெளியில் வந்து பார்த்த போது ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த முத்துராமலிங்கம் தனது படைகளுடன் காத்திருந்தார்.
விபரம் கேட்டதில் 8-மணிக்கு துணை முதல்வர் வருகிறார் என்றதும் விமானநிலையத்தில் வரவேற்பறையில் காத்திருந்து உதயக்குமார் ஓ.பி.எஸ்சை வரவேற்க்க கண்டுகொள்ளாமல் காரில் ஏறி புறப்பட்டு புதூரில் நடைபெற்ற செல்லப்பா கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் உதயகுமாரும் கலந்து கொண்டார்.
கூட்டம் நடந்து கொண்டிருந்த போது போஸ் எம்எல்ஏ கால்வலி காரணமாக பாதியில் எழுந்து மருத்துவரை பார்க்க சென்றார். ஓபிஎஸ் பேசுகையில் எனக்கு பல சோதனைகள் நடந்ததை தலைமையிடம் கூறினேன். எனக்குள் இருந்த சுமைகள் எல்லாம் இறங்கியது. அனைத்து காலகட்டத்திலும் மதுரை எனக்கு முக்கியத்துவம் கொடுத்தது. இந்த இயக்கம் 100-ஆண்டுகளுக்கு பின்பும் இருக்கும். இரட்டைஇலையும், கழகமும் ஒன்றிணைந்த நேரத்தில் ஆர்.கே. நகரிலும் வரும் உள்ளாட்சி, நாடாளுமன்றம் என எந்த தேர்தல் வந்தாலும் சேர்ந்து வெற்றி பெறுவோம் என்றார்.
-ஷாகுல்.